Saturday, 15 May 2010

வடம் பிடிப்போம் .............

அண்மைக் காலமாக இணையத்தில் நமது அன்பிற்கினிய தமிழ் செய்தி தளங்களை பார்க்கும்போது இதயத்தில் வலிக்கிறது.சில செய்தி தளங்கள் வேறு சில தளங்கள் மீதும் சில முன்னணி தமிழ் அமைப்புகள் மீதும் சேறு பூசுவதோடு நேற்று வரை முன்னணியில் இருந்த சில நபர்களை துரோகி பட்டம் கட்டுவதுமாய் தொடர்கின்றது.ஏனிந்த மாற்றம்?......
முன்னர் பிரபாகரன் ஒரு பேட்டியின்போது கூறியிருந்தார் இந்த பிரபாகரன் இல்லைஎன்றால் நூறு பிரபாகரன்கள் தோன்றுவார்கள் போராட என்று .உண்மை.............ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் ....ஒவ்வொருவரும் தானே தலைவனென்று ..இதுக்காகவா இவ்வளவு குருதி சிந்தினோம் .இந்த தலைமை போட்டிக்காகவா இத்தனை இன்னுயிர் இழந்தோம்.......நினைக்கும்போதே உடல் கூசவில்லையா?
இப்போதுள்ள நிலையில் எதிரி ஆனந்த கூத்தாடிக்கொண்டுள்ள நிலையில் எம்நிலையை எண்ணி பரிகசிக்கிறான்.இந்நிலையை மாற்ற அவரவர் அவர்களுக்கேற்ற விதத்தில் போராட்டத்தை முன்னோக்கி நகர்ர்தட்டுமே .ஒரே மாதிரி குண்டு சட்டியிலே குதிரையோட்டிக் கொண்டிருக்காமல் வித்தியாசமாய் புது முறைகளோடு இப்போதுள்ள உலக நடைமுறைக்கு ஏற்ப சிலர் முயற்சிக்கின்றனர் .வரவேற்கலாம்தானே .இது முறைதவறி தடம் மாறி போகாமல் இருக்க மறு தரப்பும் இணைந்து செயற்பட்டாலே சாத்தியம் .இதனைவிட்டு இம்முயற்சியை தூசிப்பதும் தடங்கல் ஏற்படுத்துவதும் நன்றல்ல .
ஒன்றை நாம் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் இவ்வுலகம் இனி ஆயுத போராட்டத்தை விரும்பாது .உலக ஒழுங்குக்கு ஏற்ப நாம் சில மாறுதல்களை ஏற்க வேண்டும் .எதிரி எவ்வளவு கொடியவன் என்ற போதும்.மறு தரப்பு அவர்களுக்கு ஏற்ப விதத்தில் போராட்டத்தை முன்னேடுக்கலாமே?
இதில் ஒரு தரப்பை மறு தரப்பு குற்றம் சுமத்துவது நமது பல்லை நாமே குத்தி மணந்து பார்ப்பது போலவன்றி வேறில்லை.போராட்டம் பெரும் கடல் போன்றது எல்லோரும் நீந்தி கடப்பதை விடுத்து அடுத்தவரை மூழ்கடிக்க முயல்வது புத்திசாலித்தனம் இல்லை .
புத்திசாலித்தனமான வார்த்தைகளை கோர்த்து மறு தரப்பை கொச்சை படுத்துவதில் காலத்தை போக்குவதை விடுத்து போராட்டத்தில் ஏதாவது செய்யுங்கள் .ஒரு வருடத்தில் என்ன செய்தோம் என்று மனதை கேளுங்கள் .திருப்தி என்றால் நிம்மதியாய் இருங்கள்
யாருக்கும் எவரும் ஒரே நாளில் துரோகி பட்டம் வழங்குவதை எவராலும் மன்னிக்க முடியாது .நாட்டிற்காக பல வழியிலும் உழைத்த பல சிக்கல் எதிர் கொண்டவர்களைதுரோகி பட்டம் கட்டுவது எவ்வழியிலும் எம்மினத்திற்கு நன்மை தரா .
முன்பு எமக்கு பல வழியிலும் பலம் சேர்த்த எமது தேசத்தின் குரலுக்கு இங்கு ஆவணங்கள் கிடைக்க வழி செய்த ஒருவரை துரோகி பட்டம் கட்டி போராட்டத்தில் இருந்து ஒதுங்க வைத்தது மாத்திரமல்ல அவரை எமக்கு எதிராக இயங்க வைத்ததன் பலனை எல்லோரும் நேரடியாகவே அனுபவித்திருக்கிறோம் .
எல்லோரும் வாருங்கள் வடம் பிடிப்போம் .எல்லோரையும் விரட்டினால் தேர் நகராது.எல்லோருக்கும் ஒவ்வொரு நியாயம் இருக்கிறது .கருத்து முரண்பாடுகளை பேசி தீருங்கள் .ஒருவரை ஒருவர் காட்டி கொடுக்காதீர்.

Friday, 14 May 2010

எனது அறிமுகம் என்னைப்பற்றி நானே......

எல்லோருக்கும் எனது இனிய வணக்கங்கள் .நான் ஈழத்தில் பிறந்து புலம்பெயர்ந்த வலிசுமந்த ஒரு தமிழன்.இதுவே என்னை அடையாள படுத்த போதும்.
நாம் பிறந்த பொன் நாட்டை நினைவில் தாங்கி வாழும் எனது எண்ணங்கள் இன்று முதல் எழுத்துருவாக்கம் அடைகின்றது .இந்த எழுத்துலகில் நான் புதியவன் .இது எனது கன்னி முயற்சி .எனக்கு புத்தூக்கம் தருவீர்கள் என நினைக்கிறேன் .இனி வரும் காலங்களில் நான் கடந்து வந்த வலி நிரம்பிய வாழ்வு பற்றியும் சுகம் மனதை வருடும் கால பதிவுகள் பற்றியும் உங்களுடன் பகிர விரும்புகிறேன் .